கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
நேற்றைய (25) நிலவரப்படி, சில மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.
Sunday, January 26, 2025
மோசமான வானிலை - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »