அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார்.
அவர் வருகிற 20ஆம் திகதி அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். ட்ரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ட்ரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அளித்துள்ளது.
Saturday, January 11, 2025
ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள் நன்கொடை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »