நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட 15 அவதூறான, பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வெளியிட்டமை தொடர்பாக முன்னாள் ஆளுநரின் சட்டத்தரணிகள் ஊடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல், கடத்தல்காரர் என்று மீண்டும் மீண்டும் கூறியமை, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை மேற்கொண்டமை, நிலங்களை விற்றமை மற்றும் அரசுக்கு உரித்தான மாமர கன்றுகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட 15 பொய்யான குற்றச்சாட்டுகளை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தமக்கு எதிராக முன்வைத்ததாக அந்த கடிதத்தில் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், முன்னாள் ஆளுநருக்கு கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோனுக்கு 100 மில்லியன் ரூபாவினை அமைச்சர் சமந்த வித்யாரத்ன நட்டஈடாக செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
Sunday, January 26, 2025
நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அமைச்சருக்கு கடிதம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »