முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் வழங்குவதற்காக சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.
அதாவது தென்கொரியா வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு மனுஷ நாணயக்கார தயாராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி நேற்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுஷ நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவையிலுள்ள பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி முன்னிலையில் அழைக்கும் போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவித்தலை விடுத்தார்.