Our Feeds


Sunday, January 26, 2025

Sri Lanka

பென்சில்களினால் குழந்தைகளுக்கு ஆபத்து!

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் விளைவாக, பென்சில்களை மெல்லும் குழந்தைகள் பல நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாடசாலைக் குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் இன்று சந்தையில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட பென்சில்கள் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பென்சிலால் எழுதும் போதிலும், பென்சிலை கூர்மையாக்கும் தருணத்திலும், குழந்தைகள் தங்களை அறியாமலேயே பென்சிலை வாயில் வைத்து மென்று சாப்பிடுகிறார்கள்.

குறிப்பாக பென்சில்கள் கவர்ச்சிகரமானதாக காணப்பட வேண்டுமெனில் அவற்றிற்கு அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் பூசப்படவேண்டுமென மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, குழந்தைகள் பென்சில்களை மெல்லும்போது அவர்களின் உடலில் நுழையும் இந்த இரசாயனங்களின் தாக்கங்கள் மிகவும் பாதிகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் உற்பத்திக்கு ஒரு சர்வதேச தரநிலை உள்ளது, மேலும் EN71-3 தரநிலைக்கு சான்றளிக்கப்பட்ட பென்சில்கள் 19 வகையான கன உலோகங்களிலிருந்து உடலுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன.

இருப்பினும், தற்போது சந்தையில் உள்ள பல பென்சில்கள் இந்த சர்வதேச தரத்திற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »