Our Feeds


Wednesday, January 29, 2025

Sri Lanka

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடினர்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  சக கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம் பலமான பாராளுமன்றத்தை உருவாக்க முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த விடயங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகம் விளைவிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிராக மக்கள் பக்கம் நாம் முன்நிற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில், அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »