Our Feeds


Thursday, January 2, 2025

SHAHNI RAMEES

மக்கள் பயன்பெற தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வட்ஸ்அப் எண்

 

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இந்த 0707 22 78 77  புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.



தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தனியார் மற்றும் அரை-அரசு ஊழியர்களின் சேவை பிரச்சனைகளுக்கு உடனடி பதிலளிப்பதே இந்த புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கமாகும் என்று தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »