Our Feeds


Thursday, January 16, 2025

Zameera

மின் கட்டண திருத்தம் : பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நாளையுடன் நிறைவு


 மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்பு பெறும் நடவடிக்கை 17ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய  செயல்முறை கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அந்த அமர்வுகளின் போது சுமார் 400 நபர்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை பரிசீலித்தபோது, ​​மின்சாரக் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த கருத்துக்கணிப்புகளை ஆய்வு செய்த பிறகு மின்சார கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? இல்லையா? அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை சதவீதமாக இருக்கும்? என்பது போன்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நாளை (17) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »