அவதான நிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அவதானம் இருப்பதால், கண்டி, மஹியங்கனை, உடுதும்பர, கஹடகொல்ல பகுதியிலிருந்து வீதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவதான நிலைமை தொடர்ந்து நீடிப்பதால், இரவில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்க இரவில் வீதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.