Our Feeds


Thursday, January 30, 2025

Zameera

ஜனாதிபதி நாளை யாழ்ப்பாணம் விஜயம்


 தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (ஜனவரி 31) வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பிரதேசங்களில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி திஸாநாயக்க நாளை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதேவேளை, வடக்கு-கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (ஜனவரி 29) ஆரம்பித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக பல அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்த போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 21000 பட்டதாரிகள் வேலையின்றி இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். 

மேலும் பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சையின்றி வேலைவாய்ப்பை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தமது விஜயத்தின் போது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதேவேளை, தமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »