Our Feeds


Tuesday, January 7, 2025

Zameera

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் - இருவர் உயிரிழப்பு!


 கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

 

நேற்றையதினம் (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

 

கிளிநொச்சியின் முழங்கா மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

கால்நடைகளின் சிறுநீர் நீருடன் கலந்து இருக்கும்போது மனிதர்கள் அந்த பகுதியில் நடமாடும்போது தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் அல்லது காயங்கள் ஊடாக பரவுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

 

இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் சிவப்பாக இருத்தல், உடல் நோவு, தசை நோவு, வயிற்று நோவு, இருமல், மூச்சு எடுத்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும். 

 

எனவே, மக்கள் காய்ச்சல் ஏற்பட்டாலும் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

 

இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »