பங்களாதேஷில் நடைபெறவிருக்கும் பொதுத்
தோ்தலில் போட்டியிட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது என்று பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் முக்கிய உதவியாளா் மஹ்ஃபூஸ் ஆலம் நேற்று (25) தெரிவித்தார்.
இது தொடர்பாக பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸின் கூறுகையில் ‘வங்கதேச ஆதரவுக் கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் தோ்தல் நடைபெறும்’ என்றார்.