சாத்தியமான போதெல்லாம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து அமைச்சர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் மக்களின் தொலைபேசி அழைப்புகளை கேட்டறிந்து அவர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திலும் ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பதில் அளிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, January 26, 2025
அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »