நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.