Our Feeds


Saturday, January 25, 2025

Zameera

அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் - சுனில் ஹந்துன்நெத்தி


 எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.

தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைகளை மேம்படுத்துவது தனது அமைச்சகத்தின் பங்கு என்றாலும், இப்போது தான் ஒரு பணக் கடன் வழங்குபவரின் அந்தஸ்தை ஏற்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மேலும் கூறுகையில், தேங்காய் வீணாக்கப்படுவது குறித்து பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சமீபத்தில் வெளியிட்ட கருத்து அரசாங்கத்தின் கருத்தாகும்.

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தேங்காய் சம்பல் செய்வது மற்றும் தேங்காய் பால் பிழிதல் போன்ற செயல்முறை ஒரு காரணமாகக் கூறப்படலாம் என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அண்மையில் கருத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஆண்டிற்கான Made in Sri Lanka சின்னத்தை புதுப்பிக்கும் விழா நேற்று(24) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »