பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
நவமுனியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று காலை படகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.