நாட்டிற்கு மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று வர்த்தக, வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பகுதியில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு அரிசியை மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கையை மேலும் நீடிக்கப் போவதில்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய காலக்கெடு 10 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்று நள்ளிரவு நிலவரப்படி, சுங்கத்துறையால் அகற்றப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமாக இருந்ததாகவும், இதில் 66,000 தொன் பச்சை அரிசி மற்றும் 101,000 தொன் புழுங்கல் அரிசி அடங்கும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.