Our Feeds


Wednesday, January 1, 2025

Zameera

போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க புதிய APP அறிமுகம்


 ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி செயலியை இன்று(01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்தியுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக மின் சேவைகளை அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »