Our Feeds


Wednesday, January 15, 2025

Sri Lanka

சீனாவின் சிற்பி என போற்றப்படும் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி AKD அஞ்சலி



சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்  (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன   கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு  அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.


பின்னர்,   சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.


அதனைத் தொடர்ந்து   சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர்  தலைவர் மாவோ சேதுங்  நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். 


வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர். 


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

15-01-2025


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »