புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போதைய பொலிஸார் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 75,000 உத்தியோகத்தர்கள் உள்ளனர்.
அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட நிர்வகிக்க தற்போதைய பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் புதிய உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.