செளதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்த தகவலை செளதி அரேபியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது.
செளதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிசான் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அடுத்தகட்டப் பணிகளை தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து உதவிகளையும் செய்து தர தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.