கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்தலில் போட்டியிட்டுத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800 வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.