Our Feeds


Wednesday, January 29, 2025

Sri Lanka

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் மீதான விவாதம் - பெப்ரவரி 6 ஆம் திகதி!


உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கு கிடைக்குமாயின் அது தொடர்பில் விவாதிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை உயர் நீதிமன்றம் அண்மையில் நிறைவு செய்துள்ளது.

இது தொடர்பான ரகசிய முடிவு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »