Our Feeds


Friday, January 10, 2025

Zameera

துறைமுகத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் இழப்பு

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமத நிலை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்கு வெளியே ஒரே உரிமையின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களால் சரக்கு கொள்கலன்களின் சுங்க ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் விளைவாக பொருட்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சுங்கத் திணைக்கள தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பொருட்களை அகற்றுவதற்கு துறைமுக அதிகார சபையிடம் இடமும் வசதிகளும் இருந்தாலும், இந்த அனுமதிப் பணியை வேறொரு நிறுவனம் மேற்கொள்வதால் துறைமுகத்தின் அன்றாட வருவாய் இழக்கப்படுவதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »