Our Feeds


Thursday, January 2, 2025

SHAHNI RAMEES

முன்னாள் மாகாணசபை உறுப்பினரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3 ஜீப் வாகனங்கள் மீட்பு !

 

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரால், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஜீப்களை ஒத்த மூன்று வாகனங்கள் வலான மத்திய இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாணந்துறை , பிங்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜீப்  வாகனம் ஒன்றை பயன்படுத்துவதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான ஜீப் வாகனம் ஒன்று பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கடந்த 31 ஆம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான மேலும் இரண்டு ஜீப் வாகனங்கள் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (01)கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட மூன்று ஜீப் வாகனங்களும் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

கைப்பற்றப்பட்ட மூன்று ஜீப் வாகனங்களும் பிங்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »