அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் திங்கட்கிழமை(6) அமெரிக்கப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டது.
திங்கட்கிழமை(6) கூடிய பாராளுமன்ற சபையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப் பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதாகவும் , அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஜன. 20-ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 7, 2025
டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ம் திகதி பதவியேற்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »