தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்.
தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி சலுகையாக வழங்கி இந்த சம்பள உயர்வை வழங்கும்படி அரசை கோருகிறேன்.
கடந்த பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மற்றும் பின் தங்கிய தொடர்பில் இதே இடத்தில் நாம் கொண்டு வந்த பிரேரணைகளில் கலந்து கொண்டு, இன்றைய ஜனாதிபதி நண்பர் அனுர குமார திசாநாயக்க தீவிரமாக உரை நிகழ்த்தினார். அதை மனதில் கொண்டு நண்பர் அனுரவை நோக்கி நேரடியாக இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன்.
இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களான பெருந்தோட்ட மக்களை கைதூக்கி விடாமல் நாட்டில் உண்மை சமத்துவம் ஏற்பட முடியாது.
பட்ஜட்டில் 2000 ரூபா அடிப்படை சம்பள கோரிக்கைக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொழிற்சங்கங்களுடன் கரங்கோர்த்து செயற்பட, ஜேவிபியின் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தையும் அழைக்கிறேன்.
இந்த ஜேவிபி பெருந்தோட்ட தொழிங்சங்கத்தின் தலைவர் திரு. கிட்னன் இன்று இந்த பாராளுமன்றத்தில் கெளரவ உறுப்பினராகவும் இருக்கிறார் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
Thursday, January 9, 2025
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 2000/- பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »