கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை
தொடர்பில் இன்று (03) சி.ஐ.டியில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து சி.ஐ.டியில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறினார்.
இவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கி வெளியேறும் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.