பாகிஸ்தானின் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான்
கான் (Imran Khan) மற்றும் அவரது மனைவிக்கு வரிசையாக 14 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நில மோசடி வழக்கு
இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது மோசடி செய்யப்பட்ட பணத்திற்கு ஈடாக நிலத்தை இலஞ்சமாக பெற்றதாக அவர் மற்றும் அவரின் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை | Pakistan Formar Pm Imran Khan Sentenced 14 Years
அத்துடன், சுமார் 200 வழக்குகளின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த நில மோசடி வழக்கிற்காக தற்போது இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.