கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோகிங்ய முஸ்லிம் மக்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகளை ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வருடம் 31ம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் அவர்களை 14 நாட்கள் விளக்கமறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இன்று புதன்கிழமை (08) அவர்கள் மீதான குற்றச்சாட்டை சிஐடியினர் வாபஸ் பெற்ற நிலையில் அவர்களும் அந்த 12 நபர்களும் விசா இன்றி உள்ளே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முல்லைதீவில் வைக்கப்பட்டிருந்த 103 நபர்களுடன் இணைக்கும் நோக்கில் திருகோணமலையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களையும் முல்லைதீவு நோக்கி பொலிஸார் அழைத்து சென்று உள்ளனர்.