Our Feeds


Sunday, January 5, 2025

SHAHNI RAMEES

உலகின் மிக வயதான நபர் மரணம்! 116 வயது

 



உலகின் மிகவும் வயதான நபர் என்ற சாதனையில்

இடம்பிடித்த ஜப்பானின் "டோமிகோ இடுகா" ஜப்பானின் ஆசியா மருத்துவமனையில் காலமானார்.


வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தபடி, 1908 இல் பிறந்த டோமிகோ இடுகா, கடந்த ஆண்டு டிசம்பரில் உலகின் மிக வயதான நபராக கின்னஸ் கமிட்டியால் பெயரிடப்பட்டார்.


செப்டம்பர் 2024 க்குள், ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 95,000 பேர் இருந்தனர், அவர்களில் 88% பெண்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

டோக்கியோ: உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்ட ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடுகா காலமானார். உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117வது வயதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

இவர் மரணம் அடைந்ததால் கின்னஸ் உலக சாதனையின் படி உலகின் மிக வயதான பெண்மணியாக ஜப்பானின் டோமிகோ இடுகா(116) இருந்து வந்தார். ஒசாகாவில் பிறந்த இடுகா உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது வாலிபால் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். மேலும் 10,062 அடி உயரம் கொண்ட ஒன்டேக் மலையை இரண்டு முறை ஏறியுள்ளார்.

20வயதில் திருமணம் செய்து கொண்ட இடுகாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். தற்போது அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆஷியாவில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் கடந்த 29ம் தேதி டோமிகோ இடுகா உயிரிழந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »