Our Feeds


Thursday, January 9, 2025

Zameera

பஸ்களில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்ற 03 மாத கால அவகாசம்


 பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.


தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேற்படி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »