தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இருந்து
175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று சென்றுகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.