தம்புள்ளை நகரின் பல கடைகளில் இன்று (08) காலை முதல் கட்டுப்பாட்டு விலையில் நாட்டு அரிசி மற்றும் ஏனைய அரிசிகள் விற்பனை செய்யப்படுவதை காணமுடிந்தது.
பொலன்னறுவை அரிசி ஆலை இருப்புக்கள் எவ்வாறு லொறிகள் மூலம் கடைகளுக்கு அதிகாலையில் விநியோகிக்கப்பட்டது என்பதையும் காணக்கூடியதாக இருந்ததுடன், கட்டுப்பாட்டு விலையும் அச்சிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தம்புள்ளை நகரிலுள்ள சதொச சந்தையில் ஒரு கிலோ 220 ரூபாவிற்கு ஒரு நபருக்கு ஐந்து கிலோகிராம் நாட்டு அரிசி விற்பனை செய்யப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை நகரிலேயே சில கடைகளில் அரிசி 225 மற்றும் 230 ரூபாவாக விற்பனை செய்யப்படுகையில், ஏனைய ஆலை உரிமையாளர்கள் மொத்த விலையை குறைக்காத காரணத்தினால் நாட்டு அரிசியை கிலோ 250 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக சில கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தம்புள்ளை நகரில் இன்று அனைத்து இடங்களிலும் தேங்காய் ஒன்று 140 முதல் 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.