Our Feeds


Thursday, December 19, 2024

Sri Lanka

முல்லைத்தீவில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகு!


முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் அடங்கிய படகு ஒன்று இன்றைய தினம்(19) கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து சுமார் 103 அகதிகளுடன் நாட்டு படகு ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் பொலிஸார் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளதோடு இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »