Our Feeds


Tuesday, December 17, 2024

Zameera

புளியின் விலை அதிகரிப்பு

நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலர் வலயங்களில் புளி விளைச்சல் காணப்படும் நிலையிலும் புளியின் மொத்த விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விலை அதிகரிப்பு காரணமாக 100 கிராம் எடையுடைய புளியின் சில்லறை விலை 150 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் புளியின் சில்லறை விலை 1500 ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தைக்கு போதியளவு புளி கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகி உள்ளதாக வர்த்தக மத்திய நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »