பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, “பொடி லெசி”யின் சிறைக் கூண்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, சாஜர் , 02 டேட்டா கேபிள் மற்றும் ஹெட்செட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.