ஹம்பாந்தோட்டை நகரில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒருவரை கைது செய்ய சென்ற காவற்துறைஅதிகாரிகளை தாக்கிய ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (28) ஹம்பாந்தோட்டை சதிபொல நேரத்தில், பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஒருவர் நகரத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதாக 119 தொலைபேசி அழைப்புக்கு கிடைத்ததையடுத்து குறித்த நபரை கைது செய்ய ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
குடிபோதையில் இருந்த நபரை கைது செய்யும் போது சுற்றியிருந்த சிலர் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸாரிடமிருந்து விடுவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன குமார ரணவீர தெரிவித்தார்.
தவறாக நடந்து கொண்டவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சண்டையிட்டதில் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.