Our Feeds


Tuesday, December 31, 2024

Sri Lanka

நாட்டை விட்டு வெளியேறினார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார.



கடந்த அரசாங்கத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


சுவிட்சர்லாந்திற்கு சென்று பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் முதலில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அதன் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எனினும், அவரது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, ​​வருட இறுதியில் தனிப்பட்ட பயணமாக மட்டும் வெளிநாட்டில் இருப்பதாகவும், விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரர் திசர நாணயக்கார இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »