ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் காலமானதாக கார்ட்டர் மையம் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனநாயகக் கட்சி சார்பில் 39 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர், 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார்.
கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் படி மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், அதன் எதிரி நாடான எகிப்துக்கும் இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் கார்ட்டரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதிகள் வரலாற்றில் அதிக வயதுவரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஜிம்மி கார்ட்டர், கடந்த ஒக்டோபர் மாதம் தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஜிம்மி கார்ட்டரின் மரணம் குறித்து அவரது மகன் சிப் கார்ட்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல; அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜிம்மி கார்ட்டருக்கு 4 பிள்ளைகளும் 11 பேரக்குழந்தைகளும் 14 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு திருமணமாகி 77 ஆண்டுகளான அவரது மனைவி ரோசலின் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் மரணமடைந்தார்.
ஜிம்மி கார்ட்டர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு, மனிதாபிமானப் பணிகளுக்காக அவருக்கு 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Monday, December 30, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி காலமானார்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »