மியன்மார் ரோகிங்யர்கள் திருகோணமலை தி/ஜமாலியா
முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நலன்களை விசாரிக்கவும் அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் இன்று (21)குறித்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.நேற்று (20)திருகோணமலை அஷ்ரப் துறை முகத்தை வந்தடைந்த குறித்த படகில் 115 நபர்களில் மாலுமிகள் உட்பட அதன் உதவியாளர்கள் 12 நபர்களை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
தற்காலிகமாக குறித்த பாடசாலையில் தங்க வைத்து இன்றைய தினம் நுகேகொட மிரிகானையில் உள்ள அகதிகள் தங்கு மிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை இதன் காரணமாக மீண்டும் கந்தளாய் வரை சென்று குறித்த பாடசாலைக்கு அழைத்து சென்றனர்.