Our Feeds


Saturday, December 28, 2024

SHAHNI RAMEES

இந்தியாவின் முன்னாள் பிரதமருக்கு செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி!

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின்

பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


மேலும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரங்கல் செய்தியில்,


மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மாத்திரமின்றி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு தூணாக திகழ்ந்தார்.அதுமாத்திரமின்றி  இலங்கை இந்தியா உறவை வலுப்படுத்த முன்னின்று செயற்பட்டார்.குறிப்பாக 2010 ஆண்டளவில் அவருடைய ஆட்சி காலத்தில் முதல் முறையாக  இலங்கைக்கு இந்திய அரசால் இலவச வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 


மேலும் அக்காலப்பகுதியில் அவருடன்  பலமுறை கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, அவருடைய பொருளாதார திட்டங்கள் வியப்பளித்தது. அவர் அண்டைய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவராக செயற்பட்டார்.


அவருடைய ஆட்சியின் போது, இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கிழக்கை சேர்ந்த  46 ஆயிரம் குடும்பங்களுக்கு  வீடுகளும், மலையகத்தில் 4 ஆயிரம் தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும்  வீடுகளை வழங்கி இலவச வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து  வைக்கத்தார். இவருடைய இழப்பு இந்திய மக்களுக்கு  ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இலங்கை ஒரு மிக முக்கியமான நண்பனை இழந்து இருப்பதாகவும்  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


மேலும் இவருடைய இழப்பால்வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கும் அனுதாபத்தை தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »