ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த
தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் விபத்துக்குள்ளானது.பஸ் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது.
இவ்விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர், அவர்கள் அனைவரும் காயமடைந்து திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.