Our Feeds


Wednesday, December 18, 2024

Sri Lanka

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்தில் மு.கா எம்.பிக்கள் பிரார்த்தனை.



(எஸ். சினீஸ் கான்)


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் 10 ஆவது பாராளுமன்றத்தில்  அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களான கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி  நிசாம் காரியப்பர், கலாநிதி எம் .எல் .ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம் .எஸ் உதுமாலெப்பை, எம்.எஸ். நளீம் ஆகியோர் இன்று (18) காலை சுபஹுத் தொழுகையின் பின்னர், ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அன்னாரின் அடக்கஸ்தலத்தின்  அருகில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


உயர் பீட உறுப்பினர் மௌலவி கலீல் (மதனி) மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும், சிறப்பான மறுமை வாழ்வுக்காகவும் துவா பிரார்த்தனையை முன்னின்று நடத்தியதோடு, உபதேசமும் செய்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »