Our Feeds


Thursday, December 19, 2024

SHAHNI RAMEES

இஸ்லாத்திற்க்கு எதிராக கருத்து தெரிவித்த ஞானசார தேரருக்கு, வழக்கின் இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ளாததால் - பிடியாணை!

 

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

குற்றஞ்சாட்டப்பட்ட  ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக கௌரவ நீதியரசர் பசன் அமரசிங்க அவர்கள் கைது பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இலங்கை குற்றவியல் சட்டத்தின் 291பி பிரிவின் கீழ் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக, இன்று தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஞானசார தேரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். 

இந்த முறைப்பாடு ஜூலை 2016 இல் கிருலப்பனவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தியதற்கானது.  “இஸ்லாம் ஒரு புற்றுநோய், அதை துடைப்போம்” என்பது அவர் வெளியிட்ட கருத்து.

நீண்ட விசாரணைக்குப் பிறகு,  நீதிபதி இன்று தீர்ப்பு வழங்குகிறார்.  இந்நிலையில் இன்று இறுதித் தீர்ப்பை எதிர்கொள்வதை ஞானசார தேரார் தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு 09/01/2025 அன்று தீர்ப்புக்காக மாற்றப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »