தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில், குறித்த இடத்திற்கு சென்று பார்த்த போது, துணி துண்டில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் காணப்பட்டது.
தெமட்டகொட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உடனடியாக சிசுவை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், வைத்தியர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த குழந்தை ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.