இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்சிங் 92 வயதில் காலமாகியுள்ளார். அவரின் இழப்பு இந்தியர்களுக்கும் , இலங்கையினருக்கும் பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நுவரெலியா யாமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானிடமிருந்து மலையக மக்களின் பிரச்சினைகளை கரிசனையோடு கேட்டறிந்து பல நல திட்டங்களை முன்னெடுத்தவர் அமரர் மன்மோகன்சிங். அவருடைய ஆட்சி காலப்பகுதில் இலங்கை மக்களுக்கும், மலையக மக்களுக்கும் பல நன்மைகள் கிட்டியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரின் இழப்பு இலங்கை மக்களுக்கும் மலையக மக்களுக்கும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.