சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை கையளிப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(ஏ) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஜூன் மாதம் மீண்டும் அந்த அறிக்கைகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Saturday, December 28, 2024
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »