Our Feeds


Sunday, December 29, 2024

Sri Lanka

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு!


ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும்  இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

4 தசாப்தங்களாக இலங்கையின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.

இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில்  19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில்  1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.

சவேந்திர சில்வா வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார்.

அந்த மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 31, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகி நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றினார்.

அதாவது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் கீழ் அவர் செயற்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »