புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும்.
Thursday, December 19, 2024
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம் - ரஷ்யா!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »